அவள் கோயிலில் ஒலித்த குர் ஆன்!!!!!!!!
ஆங்...காதல் கதையா?? என்று அலுத்துக் கொள்ளாதீர்கள்!
இந்தக் காதல் வித்தியாசமான காதல்...புதுமையான காதல் என்றெல்லாம் சொல்ல முடியாது.
என்னைப் பொறுத்தவரை உலகத்தில் வித்தியாசப்படாமல் இருப்பது காதல் ஒன்று தான்...
ஆனால் யார், யாரால் எப்படி காதலை உணர்கிறார்கள் என்பதில் காதல் வித்தியாசப்படுகின்றது!
ஒவ்வொருவர் காதலிக்கும் விதமும் காதலிக்கப்படும் விதமும் வித்தியாசம். ஒவ்வொரு வித்தியாசமும் ஒவ்வொரு சுவாரஸ்யம்..
அப்படி ஒரு வித்தியாசத்தை சுவாரஸ்யமாக்கும் எழுத்துக்கள் இவை..!
காதல் வந்தால் கவிதை வரும், பசிக்கும் உண்ண முடியாது, தூக்கம் வரும் தூங்க முடியாது, யார் பேசுவதும் காதில் கேட்காது..
இப்படி காதல் பற்றி சொன்னதெல்லாம் என் உணர்வுகளில் பொய்கள்!
அவளைக் பார்க்கத் தெம்பு வேண்டி உணவு..
அவள் பற்றிக் கனாக் காண தூக்கம்..
அவளைப் பற்றி பேசுவார்களோ என்று எல்லாம் கேட்டல்!
சரி...அதென்ன பெயர் சேச்சி..?
எல்லாக் காதலிகளுக்கும் காதலன் வைக்கும் செல்லப் பெயர்கள் உண்டு...
அவள் சில்மிஷம் சொல்லும் பெயர்கள்...
அவள் பெயரை சுருக்கிச் சொல்லும் பெயர்கள்..
அவள் அழகினால் வந்த பெயர்கள்..
அர்த்தமாய் வைத்த பெயர்கள்...இப்படிப் பல விதம்!
இந்த பெயரும் அவள் செல்லப் பெயர் தான்!
அழகினாலோ, சில்மிஷங்களாலோ அர்த்தப்படுத்தி வைத்த பெயர் அல்ல..
அவள் பெயர் தெரியாமலேயே அவளால் அவன் (?!) களவாடப்பட்ட போது வைக்கப்பட்ட பெயர்...!
அவளை எப்படி அழைப்பது என்று தெரியாத போது அழைக்கப் பயன்பட்ட பெயர், அந்தக் காதலில் அவள் செல்லப் பெயரானது.
..............................
காதல் ஒரு அற்புதமான உணர்வு!
பூக்கள் அழகாவதும் புயல் தென்றலாவதும் மனிதர்கள் எதிரிகளாவதும் உலகமே தடம் புரள்வதும் காதலில் தான்..
காதல் சிலருக்கு அதிர்ச்சிச் சம்பவம்..சிலருக்கு அதிரவைத்த சம்பவம்..எனக்கு என்னைப் புரிய வைத்த சம்பவம்!
இது தான் வாழ்க்கை...இப்படித் தான் வாழ வேண்டும் என்கின்ற யதார்த்தங்களை புரிந்து கொள்கின்ற போது புரியவைத்தவள் வெகுதூரத்தில்...
காதலிக்கின்ற போது காதல் எவ்வளவு சந்தோஷங்கள் தருமோ அதைவிட அதிக வலிகளையும் தர காதலால் முடியும்.
ஆந்த வலிகள் ஜீரணிக்கமுடியாதவை!
அந்த வலி..
கடைசித்துளி குருதியையும் வற்றவைத்து உடலை வாழவைக்கும்..
ஒவ்வொரு நாம்பிலும் அவள் நினைவுகளை நிரப்பும்..
இதயத்தின் ஒவ்வொரு துடிப்புக்காமான இடைவெளிகளைத் தூரமாக்கும்..
ஒருவனின் வாழ்க்கையை மாற்றிப் போடும் மந்திரம் காதல்...
பெண்களைப் பார்த்து பூரிக்கும் வயதில் தான் அந்த மந்திரம் எனக்கு ஓதப்பட்டது...ஓதியவள் அவள்..
பெண்களைப் பார்த்து பூத்த அந்தப் பூரிப்புகள் அவளிடம் தான் புனிதமாகின...
இழந்து போன ஒருகாதல் மறுபடி இதயத்தில் இருப்புக் கொள்ளும் என்ற நம்பிக்கையில்...
அந்தப் புனிதங்களுக்காகவே ஆரம்பித்த எழுத்துக்களில் புனிதமாக்கியவளையே எழுதிவிடும் முயற்சி..இந்தச் சேச்சி!
இது போல பல கதைகள் நீங்கள் படித்திருக்கல்லாம்...
இவ்வளவு தானா என்று சலிக்கலாம்..
உங்கள் கதைகள் கதைகளாகவே இருக்கும்...வாழும்வரை!
வாழப்படும் போது தான் கதைகள் உணரப்படுகின்றன..
இது கேள்விப்பட்ட கதையல்ல....உணரப்பட்ட கதை...
(தொடரும்.....)

